வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மினி பஸ் மோதி பெண் பலி தமுமுக ஆம்புலன்ஸ் விரைவு!


மினி பஸ் மோதி பெண் பலி தமுமுக ஆம்புலன்ஸ் விரைவு!

நேற்று இரவு கடலூர் பஸ் நிலையத்தில் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ராசி திருமண மண்டபம் உரிமையாளர் அவர்களின் மருமகள் ஜாஸ்மிண் எண்பவர் மீது மினி பஸ் ஏறி தலையில் அடிபட்டு அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. தகவல் அரிந்த சில நிமிடங்களில் நெல்லிக்குப்பம், கடலூர் நகர தமுமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று அங்கு தேவையான உதவிகளை செய்தனர். சகோதிரியின் ஜனாஸா தமுமுக ஆம்புலண்ஸில் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்தில் உயிர் இழந்த சகோதிரிக்கு துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

தகவல் - அஸ்கர் அலி நகர செயலாளார் தமுமுக நெல்லிக்குப்பம்

சனி, 2 ஆகஸ்ட், 2014

மறைந்த களக்காடு ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு ஆறுதல்!


நெல்லை (கிழக்கு) மாவட்டம் களக்காடு கிளை #தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் சகோ மர்ஹூம் ஆரிப் அவர்கள் இல்லம் சென்ற தமுமுக மாநில தலைவர் மவ்லவி J.S.ரிபாயி ரஷாதி அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினார். மாவட்ட பொறுப்புகுழு தலைவர் மில்லத் இஸ்மாயில் பொறுப்பு குழு உறுப்பினர் அப்துல் வாஹித், பேட்டை சேக், வக்கீல் மீரான் உடனிருந்தனர்.
தொண்டியில் சாலை விபத்து மீட்பு பணியில் தமுமுக ஆம்புலன்ஸ்!


தொண்டி அருகே இன்று காரும் பஸ்ஸூம் விபத்துக்குள்ளானது இதனை அறிந்த #தமுமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸோடு களத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
களக்காடு நகர தமுமுக தலைவர் வபாத்தானார்.

நெல்லை,கிழக்கு மாவட்டம் களக்காடு #தமுமுக நகர தலைவராக சகோ.ஆரிப் இருந்து வந்தார். இன்று மாலை ஆம்புலன்ஸில் ஒரு நோயாளியை சேர்த்துவிட்டு வந்தார்.பிறகு நோன்பை திறந்து விட்டு மீன்டும் ஒரு நோயாளியை அவசர ஊர்தியில் கொண்டு சென்றார்.

போகும்வழியில் நாங்குநேரி பை பாஸ் சாலையில்ஆரிபிற்க்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டோரத்தில் நிறுத்தியவுடன் அவரது உயிர் பிரிந்தது.(இறைவன் நாட்டம்) ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஹூவூன்

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரை சுவனத்தில் நுழைய செய்வானாக!

முதியவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 80 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 07-07-2014 அன்று மரணித்துவிட்டார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என தகவல் அறிந்ததும் தமுமுக மாவட்ட நிர்வாகம் இவரை அடக்கம் செய்ய முயற்சி செய்து அதன் அடிப்படையில் அரிப்புதெரு பள்ளியில் அடக்கம் செய்ய ஜமாத்நிர்வாகம் அனுமதி அளித்தது இன்று 09-07-2014 மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யபட்டது. தமுமுக உள்ளிட்ட சமுதாய இயக்க பிரதிநிதகள் பங்கெடுத்தனர்.

திங்கள், 7 ஜூலை, 2014

அதிரை அருகே வாகன விபத்து இருவர் பலி – தமுமுக ஆம்புலன்ஸ் களத்தில்


அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவன் ( வயது 26  ) குமார் ( வயது 24 ) நண்பர்களான இருவரும் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் கீழத்தோட்டத்திலிருந்து கருங்குளம் நோக்கி ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் பேராவூரனியிலிருந்து முத்துபேட்டையை நோக்கி டெம்போ வாகனம் வாழைத்தார்களை ஏற்றிகொண்டு சென்றது. டெம்போ வாகனம் கருங்குளம் அருகே சென்றுகொண்டிருந்த போது பின்புறமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் இறந்த வாலிபர்களின் இரு உடல்களையும் கைப்பற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றது.


தகவலறிந்த வாலிபர்களின் உறவினர்கள் மருத்துவனையில் சோகத்துடன் காணப்படுகின்றனர். பிரத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
நன்றி –அதிரை நியூஸ்

ஞாயிறு, 29 ஜூன், 2014

போரூரில் அடுக்கு மாடி இடி விழுந்து தரைமட்டம் மீட்பு பணியில் 5 ஆம்புலன்ஸ்கள் 50 தமுமுகவினர்


சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் நேற்று 13 அடுக்கு மாடி இடிந்து தரமட்டமானது 100க்கும் மேற்ப்பட்டோர் சிக்கிகொண்டனர் தமுமுக மற்றும் ..க காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்கள் ஆலோசனையின் படி மீட்பு குழு நேற்று இரவு முதல் இன்று வரை போராடி வருகிறது. மாவட்ட செயளாலர் J.சலீம்கான் தலைமையில் 5 ஆம்புலன்ஸ்களும் 50 பேர் கொண்ட மீட்பு குழுவும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மாவட்ட தொண்டரணி செயளாலர் S.R.A.இப்ராஹிம் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் S.தமீம் அன்சாரி மற்றும் மாவட்ட மாணவரணி செயளாலர் கௌஸ் பாஷா மற்றும் தொண்டரணி மாணவரணி நிர்வாகிகளுடன் 50 க்கும் மேற்பட்ட தமுமுகவின் போர்படை வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  


சனி, 28 ஜூன், 2014

தென்காசி தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் தொடர்புக்கு


நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி கிளை தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் இயங்கும் அவசர சேவை ஊர்தி


கோட்டைப்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்கும்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை தமுமுக ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்கும்.

ஆயங்குடியில் 114வது ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு


கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகரின் சார்பாக ஜூன் 27 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக 114 வது அவசர ஊர்தி அர்ப்பணிக்க பட்டது. இந்த சிறப்பு மிகு நிகழ்வையொட்டி பல்வேறு நிகழ்சிகள் நகர தமுமுக சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டது. 

1.ஆயங்குடி முழுவதும் ஆயங்குடி இன் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட முன்னோர்களின் நினைவாக சுமார் 6 இடங்களில் வரவேற்ப்பு வளையம் வைக்கப்பட்டது இந்த நிகழ்வு பொது மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

2.ஆயங்குடி நகரை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றும் நோக்கில் மரங்கள் இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை தமுமுக மாநில செயலாளர் சகோ கோவை செய்யது அவர்களும் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மரக்கன்றுகளை நட்டனர் இதற்கான ஏற்ப்பாட்டை நகர தமுமுக இளைஞர் அணி செய்தது குறிப்பிடத்தக்கது.

3.ஆயங்குடி நகர புதிய தமுமுக அலுவலகத்தை தமுமுக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்து நகரின் முக்கியபகுதிகளில் கருப்பு வெள்ளை கொடியை ஏற்றினார்.

4.சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் நோக்கில் இருசக்கர வாகன பேரணி ஆயங்குடி நகர எல்லையில் இருந்து பொதுக்கூட்ட மேடைவரை நடைப்பெற்றது.

5.இறுதியாக ஆயங்குடி சுற்றுவட்டார ஊராட்சிமன்ற தலைவர்கள்மருத்துவர்கள்சமூக ஆர்வலர்கள் ஊர் முக்கியஸ்தரர்கள் மற்றும் தமுமுக மூத்த தலைவர் சட்டமன்ற கட்சித்தலைவர் கன்னியமிகு பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் த மு மு க மாநில செயலாளார் அண்ணன் கோவை செய்யது, அண்ணன் மண்டலம் ஜெய்னுல்லாபுதீன், அண்ணன் கிதர் முஹம்மது ஆகியோரின் எழுச்சியரைகளுடன் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்டத்தின் நிர்வாகிகள், உள்ளூர் மற்றும் வௌியூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவரணி மற்றும் தொண்டரணி சகோதரர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகெண்டு சிறப்பித்தனர்.

என்றும் மக்கள் சேவையில்,

தமுமுக & மமக


வியாழன், 26 ஜூன், 2014

பரமக்குடியிய் தமுமுகவின் 115 வது ஆம்புலனஸ் அர்ப்பணிப்புபரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் முனைவர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்களும்,  தமுமுகவின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும் 25-06-2014 அன்று அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 


புதன், 25 ஜூன், 2014

தமுமுகவின் 114வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு - விழாகோலம் பூணும் ஆயங்குடி!


'வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'


சமுதாய பேரியக்கமான தமுமுகவின் 114 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் வரும் வெள்ளியன்று மாலை ஆயங்குடியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர். பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது, மமக மாநில அமைப்புச் செயலாளர் மண்டலம் எம். ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் முஹம்மது ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இது தவிர உள்ளூர் மருத்தவர்களும், தமிழக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

வரும் 27 அன்று மாலை சுமார் 5 மணியளவில் நகர தமுமுக அலுவலகம் அருகில் பேராரசிரியர் அவர்கள் தமுமுக இருவண்ண கொடிகளை ஏற்றி பொடதுகூட்ட நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நகரின் ஏனைய பகுதிகளில் மாநில செயலாளர் செய்யது தமுமுக கொடியையும், மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் எம். ஜெய்னுல் ஆபிதீன் மமக கொடியையும் ஏற்றிட இருக்கின்றனர். இதற்கிடையில் நகர தமுமுக-மமக அலுவலகத்தை பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் திறந்து வைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடந்து நகரின் பல பகுதிகளில் மரகன்று நடும் நிகழ்வை மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் முஹம்மது தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக (சுமார் 4:30 மணியளவில்) நகர எல்லையிலிருந்து பொதுக்கூட்ட திடல் வரை தமுமுக இருவண்ண கொடிகளுடன் இளைஞர்களின் பேரணி அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இப்பேரணியை மாநில செயலாளர் கோவை செய்யது கொடியசைத்து தொடங்க்கி வைக்கிறார். பேரணி பொதுக்கூட்ட அரங்கை அடைந்ததும், மக்ரீப் தொழுகைக்கு பிறகு தமுமுகவின் 114வது ஆம்புலன்ஸ் முனைவர். பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களால் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்பணிக்கப்பட்டதும், பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளது.

வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்திறகான முன்னேற்பாடுகளை நகர தமுமுக தலைவர் நியமத்துல்லாஹ் தலைமையில் சகநிர்வாகிகளும் தொண்டர்களும் கடந்த சில வாரங்களாகவே மும்முரமாக செய்து வருகின்றனர். நகரத்தின் அனைத்து வீதிகளிலும் கழகத்தின் கருப்பு வெள்ளை கொடிகள் பட்டொளி வீசி பரக்கின்றன. முக்கிய பகுதிகளில் தீவிர தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சார்பில் பிரமாண்ட விளம்பர டிஜிட்டல் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகரின் ஏழு முக்கிய இடங்களில் ஊருக்காக உழைத்தே மாண்ட முன்னோர்களின் பெயரில் வரவேற்பு வளையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் வரவேற்பு வளையம் தனது அசையா சொத்துக்களில் சிலவற்றை ஜாமிஆவிற்கு கொடையளித்த ஹாஜி. முகம்மது இஸ்மாயில் அவர்களின் பெயரில் வைக்கப்பட உள்ளது. இவர் இளம் விஞ்ஞானியும், தமுமுகவின் தீவிர ஆதரவாளருமான டாக்டர். எம்.ஐ. இர்ஷாத்தின் பாட்டனார் என்பது குறிப்பிடதக்கது.

ஆயங்குடியில் அமைந்திருக்கும் பிரமாண்ட அரசு மருத்துவமனை அமைய பெருமளவிலான நிலமளித்த ஹாஜி. முஹம்மது ஹுசைன் அவர்களின் பெயரில் இரண்டாவது வரவேற்பு வளையமும், ஜாமிஆவிற்கு சொந்தமான நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது உயிர்நீத்த ஜனாப். கலீலுர் ரஹ்மான் பெயரில் மூன்றாவது வரவேற்பு வளையமும் அமைக்கப்படவுள்ளது. ஜாமிஆவிற்கு சொந்தமான குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூளையாக செயல்பட்ட ஹாஜி ஜெ. முகம்மது அலி அவர்களின் பெயரில் ஒரு வரவேற்பு வளையமும், நகர ஜாமிஆவின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ். சிராஜுத்தீன் அவர்களின் பெயரில் ஒரு வரவேற்பு வளையமும், நகர ஜாமிஆ மஸ்ஜிதில் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தலைமை இமாமாக பணிபுரிந்த அல்ஹாஜ். மௌலானா மௌலவி சௌகத் அலி மிஸ்பாஹி அவர்களின் ஒரு வரவேற்பு வளையமும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர ஆயங்குடி முஸ்லிம் பட்டதாரிகள் சங்க கல்வி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர், தமிழ் ஆர்வலர், புலவர். அப்துல் குத்தூஸ் அவர்களின் பெயரில் பிரமாண்ட வரவேற்பு வளையம் ஒன்றும் அமையவுள்ளது.

கடல்கடந்து வாழும் மக்கள் பொதுக்கூட்டத்தினை கண்டுகளித்திட நிகழ்வுகள் யாவையும் இணயத்தில் நேரலையாக ஒளிப்பரப்பிடவும், உள்ளூரில் முக்கிய வீதிகளில் பெரும் திரைகளில் ஒளிப்பரப்பிடவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.


தமுமுகவின் எஃகு கோட்டைகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் அதன் 114 ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்காக தீவிரமாக நடைபெற்றுவரும் ஏற்பாடுகள் உள்ளூர் மக்களிடையே மட்டுமின்றி சுற்றிவட்டார சமுதாய மக்களிடையேயும் பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தி உள்ளது - 'வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'

செவ்வாய், 24 ஜூன், 2014

பரமக்குடியில் தமுமுகவின் 115 வது ஆம்புலன்ஸ் அற்பணிப்பு
இன்ஷா அல்லாஹ் 25.06.2014 அன்று பரமக்குடியில் 115 வது ஆம்புலன்ஸ் அனைத்து சமூக மக்களுக்காகஅற்பணிப்பு மற்றும் சமூக நல்லிண்ணக்க பொதுக்கூட்டம்

ஆம்புலன்ஸ் அற்பணித்து சிறப்புரை:

Prof.Dr. M.H.
ஜவாஹிருல்லாஹ்.MLA. மமக சட்டமன்ற குழு தலைவர்
ப.அப்துல் சமது பொது செயலாளர் தமுமுக
S.S.
ஹாரூன் ரஷித் இனை பொதுசெயலாளர் மமக


அன்புடன் அழைக்கும்....
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 
பரமக்குடி ஒன்றியம்

ஆயங்குடியில் வைக்கப்பட்டுள்ள பிராமண்ட பேணர்கள்...


ஆயங்குடியில் 114 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது இதனையொட்டி ஆயங்குடியில் வைக்கப்பட்டுள்ள பிராமண்ட பேணர்கள்...ஞாயிறு, 22 ஜூன், 2014

சீர்காழியில் 113 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம்


நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி நகர தமுமுக சார்பில் 21-06-2014 அன்று தமுமுகவின் 113 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் பொதுக்கூட்டமும் சீர்காழி பழைய பேரூந்து நிலையம் அருகில் நகர தலைவர் ஆசிக் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முசாஹூத்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி, மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, மாநில மருத்துவ சேவை அணிசெயலாளர் கித்ரு, மாவட்ட தலைவர் ஜூபைர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி ஆம்புலன்ஸை அர்ப்பணித்தனர்.


இறுதியாக நகர செயலாளர் ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.


பட்டுக்கோட்டையில் 112 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக சேவைகளில் ஆம்புலன்ஸ் சேவையும் ஒன்று. அனைத்து சமூதாய மக்களின் பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்று வரும் இந்த சேவை பல்வேறு ஊர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக தயாள மனம் படைத்த பலர் நிதிஉதவி செய்தும் வருகின்றனர்.தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகர தமுமுக சார்பில் 21-06-2014 அன்று ஆம்புலன்ஸ் சேவை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் துவங்கப்பட்டது. பட்டுக்கோட்டை அழகிரி நினைவரங்கில் நடைபெற்ற அர்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவரும்ம.ம.க சட்டமன்றக்குழு தலைவருமான  பேராசிரியர்டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ்.MLA., மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MBA., மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் K. ராவுத்தர்சா,  தலைமை கழக பேச்சாளர் திருச்சி A. ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை வழங்கினார்கள்.

முன்னதாக மாவட்ட நிர்வாகிகள், மருத்துவர்கள், ஜமாத்தார்கள், நகர நிர்வாகிகள் என முன்னிலை வகிக்க வரவேற்புரையை தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை S. அஹமது ஹாஜா நிகழ்த்தினார்.

இவ்விழாவில் மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் ஆகியரோடு பட்டுகோட்டைஅதிரைமதுக்கூர்முத்துபேட்டை புதுபட்டினம்மல்லிபட்டினம்சேதுபாவாசத்திரம் பேராவூரணி உள்ளிட்ட ஊர்களின் தமுமுக- மமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.தொண்டியில் 111 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு முப்பெரும் விழாஇராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி நகர தமுமுக சார்பில் 2 வது ஆம்புலன்ஸ் சேவையும் தமுமுகவின் 111 வது ஆம்புலன் சேவையுமான நிகழ்வும், மருத்துவசேவைகளில் சாதனை புரியும் நல்லுல்லங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும், கல்வியில் சாதனை பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வும் என முப்பெரும் விழா விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தொண்டி சாதிக் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளர்களாய் கலந்துகொண்ட மூத்த தலைவர்கள் பேராசிரியர். டாக்டர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.ல்.ஏ அவர்கள் அவசர ஊர்தியை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பனித்தும், அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் விருதுகள் வழங்கியும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
புதன், 18 ஜூன், 2014

மாற்றமத பெண்மணியை அடக்கம் செய்த தமுமுகவினர்!


இன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்னின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை. இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது. லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் களத்திற்கு சென்றனர். முஸ்லிம் பெண்கள் சிலர் நமக்கு உதவியாக அந்த பெண்ணிற்கு செய்யவேண்டியவைகலை செய்துகொடுத்தார்கள். எல்லாவேலைகளும் முடிந்தவுடன் தமுமுக ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள். 

சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யா அல்லாஹ் நற்கூலிகளை கொடுப்பாயக 

என்றும் மக்கள் சேவையில் தமுமுக