ஞாயிறு, 22 ஜூன், 2014

பட்டுக்கோட்டையில் 112 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக சேவைகளில் ஆம்புலன்ஸ் சேவையும் ஒன்று. அனைத்து சமூதாய மக்களின் பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்று வரும் இந்த சேவை பல்வேறு ஊர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக தயாள மனம் படைத்த பலர் நிதிஉதவி செய்தும் வருகின்றனர்.



தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகர தமுமுக சார்பில் 21-06-2014 அன்று ஆம்புலன்ஸ் சேவை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் துவங்கப்பட்டது. பட்டுக்கோட்டை அழகிரி நினைவரங்கில் நடைபெற்ற அர்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவரும்ம.ம.க சட்டமன்றக்குழு தலைவருமான  பேராசிரியர்டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ்.MLA., மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MBA., மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் K. ராவுத்தர்சா,  தலைமை கழக பேச்சாளர் திருச்சி A. ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை வழங்கினார்கள்.

முன்னதாக மாவட்ட நிர்வாகிகள், மருத்துவர்கள், ஜமாத்தார்கள், நகர நிர்வாகிகள் என முன்னிலை வகிக்க வரவேற்புரையை தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை S. அஹமது ஹாஜா நிகழ்த்தினார்.

இவ்விழாவில் மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் ஆகியரோடு பட்டுகோட்டைஅதிரைமதுக்கூர்முத்துபேட்டை புதுபட்டினம்மல்லிபட்டினம்சேதுபாவாசத்திரம் பேராவூரணி உள்ளிட்ட ஊர்களின் தமுமுக- மமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக