புதன், 18 ஜூன், 2014

மாற்றமத பெண்மணியை அடக்கம் செய்த தமுமுகவினர்!


இன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்னின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை. இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது. லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் களத்திற்கு சென்றனர். முஸ்லிம் பெண்கள் சிலர் நமக்கு உதவியாக அந்த பெண்ணிற்கு செய்யவேண்டியவைகலை செய்துகொடுத்தார்கள். எல்லாவேலைகளும் முடிந்தவுடன் தமுமுக ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள். 

சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யா அல்லாஹ் நற்கூலிகளை கொடுப்பாயக 

என்றும் மக்கள் சேவையில் தமுமுக










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக