திங்கள், 7 ஜூலை, 2014

அதிரை அருகே வாகன விபத்து இருவர் பலி – தமுமுக ஆம்புலன்ஸ் களத்தில்


அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவன் ( வயது 26  ) குமார் ( வயது 24 ) நண்பர்களான இருவரும் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் கீழத்தோட்டத்திலிருந்து கருங்குளம் நோக்கி ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் பேராவூரனியிலிருந்து முத்துபேட்டையை நோக்கி டெம்போ வாகனம் வாழைத்தார்களை ஏற்றிகொண்டு சென்றது. டெம்போ வாகனம் கருங்குளம் அருகே சென்றுகொண்டிருந்த போது பின்புறமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் இறந்த வாலிபர்களின் இரு உடல்களையும் கைப்பற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றது.


தகவலறிந்த வாலிபர்களின் உறவினர்கள் மருத்துவனையில் சோகத்துடன் காணப்படுகின்றனர். பிரத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
நன்றி –அதிரை நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக