ஞாயிறு, 6 ஜூன், 2010

சத்தியமங்களத்தில் 83வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் தமுமுகவின் சார்பில் 83&வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த மே 29 அன்று நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.
மமக துணை பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் கோவை உமர், தலைமைக் கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் ஆகியோர் உரையாற்றினர்.


சனி, 5 ஜூன், 2010

தமுமுகவின் 84 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!


தமுமுகவின் 84 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 84 வது அவசர ஊர்தி அனைத்து சமுதாய மக்களுக்கும் எதிவரும் 20/06/2010 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமுமுகவின் மாநில தலைவர் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhil., PhD.,அவர்களால் அர்ப்பணிக்கப்படுகிறது. (அல்ஹம்துளில்லாஹ்…)
அதனைத் தொடர்ந்து ‘சமுதாய மக்களின் அரசியல் எழுச்சி’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் தமுமுகவின் மாநில தலைவர் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhil., PhD., அவர்களும், தமுமுகவின் மாநில துணை செயலாளர் பேரா.J.ஹாஜாகனி.MBA.,MPhil.,அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு பழனி நகர தமுமுக அழைக்கிறது.