புதன், 11 நவம்பர், 2009

முஸ்லிம் மாணவர்களை அலைக்கழிக்கும் மருத்துவ தேர்வுக்குழு!



ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தாசில்தார் முஹம்மது சதக்கத்துல்லாஹ். இவரின் மகன் ஷேக் அப்துல்லா (18). இவர் +2வில் 1200க்கு 1135 மதிப்பெண் பெற்றார். இவருக்கு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் சேர வாய்ப்பு வந்ததையடுத்து மருத்துவக் கவுன்சிலிங்கிற்காக 29.9.2009 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்திற்குச் சென்றார்.
அன்று கவுசிலிங்கில் தேர்ந்தெடுக்கப் பட்ட இவருக்கு கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் என்ற ஊரில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் சேர இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சேர்க்கைக்கான உத்தரவை அன்று வழங் காமல், மறுநாள் வழங்குகிறோம் என்று மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் மறுதினம் அவர் குறிப்பிட்ட கல்லூரியில் சேரவேண்டும் என்பதால் 'இன்றே உத்தரவை கொடுங் கள் என்று மாணவர் தரப் பில் கெஞ்சிக் கேட்டும் தேர்வுக் குழுவி னர் மறுத்து விட்டு 'நாளை வாருங்கள். நாங்களே இன்று பேக்ஸ் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து 30.9.09 அன்று மதியம் 1.45 மணியளவில் மாணவருக்கான அனுமதி ஆணையை கொடுத்துள்ளனர். உடனடியாக அந்த ஆணையை பேக்ஸில் மாணவரே கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, விமானத்தில் போக முடியாததால் காரில் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றனர். நள்ளிரவு நேரமாகி விட்டதால் அடுத்த நாள் (31.9.09) காலையில் சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆயினும், 30.9.09 அன்று மாலையே மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் மாணவரை தங்கள் கல்லூரியில் சேர்க்க இயலாது என்று கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. 29.9.09 அன்று மாலையே பேக்ஸ் அனுப்பி விடுவதாக சொன்ன தேர்வுக் குழுவினர், சொன்னபடி கல் லூரிக்கு பேக்ஸ் அனுப்பவில்லை. மறுநாள் மாணவர் அனுப்பி பேக்ஸும் கல்லூரி நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மாணவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மாணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு உடனடியாக மாற்று ஏற் பாடுகளை செய்ய உத்தரவிட்டது. எனினும் இதுவரை மாணவருக்கான சீட் ஒதுக்கப்படவில்லை. மருத்துவ தேர்வுக் குழுவினர் முஸ்லிம் மாணவரின் மருத்து வக் கல்வியை நாசமாக்க, திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். 29.9.09 அன்றே மாணவருக்கு அதுவும் கன்னியாகுமரி கல்லூரியில் அடுத்த நாளே சேரவேண்டிய மாணவருக்கு கடைசி தினத்தன்று ஆணை வழங்கியது உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே தேர்வுக் குழு வினால் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் அலைக்கழிக்கப்பட்டு கடைசி யாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றார்.
தமிழக அரசின் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கே மாணவர்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டே சீர்குலைக்க நினைக்கும் மருத்துவத் தேர்வுக்குழுவின் மீது நடவடிக்கை எடுத்து அம்மாணவருக்கு கன்னியாகுமரியில் இல்லாவிட்டாலும் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க அரசு நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மாணவரின் கனவை நனவாக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

சனி, 7 நவம்பர், 2009

துபை முமுகவின் 4 வது இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் பெரும் உதவியால் 06-11-09 வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் துபை முமுக சார்பாக 4 வது இரத்த தானம் முகாம் துபை அல் வாசல் மருத்துவமனையில் நடைபெற்றது.




துபை மண்டல நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்ந்துருத்தி அப்துல் ரவூஃப் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இம்முகாமில் 50 சகோதரர்கள் இரத்த தானம் செய்தார்கள். முகாமினுடைய சிறப்பு அழைப்பாளர்களாக ST கூரியர் நிறுவனத்தின் துபை மேலாளர் சகோதரர்க சிராஜ் அவர்களும், இஸ்லாமிய அழைப்பாளர் கீழை ஜமீல் அவர்களும் அமீரகத்தினுடைய தொழில் அதிபரும் இளையாங்குடியைச் சார்ந்த சகோதரர் அபூதாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்கள். அமீரகத்தின் முமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி முகாமை பார்வையிட்டு சென்றார்கள். சிறப்பான முறையிலே துபை மண்டல முன்னால் துணைச் செயலாளர் ஹைதர் நஸீர் அல் கூஸ் பொருப்பாளர் மேலப்பாளையம் அப்துல் கரீம் ஆகியோர் சிறப்பான வாகன வசதிகளை செய்திருந்தார்கள்.
--நமது செய்தியாளர்--

புதன், 4 நவம்பர், 2009

இரத்ததான முகாம் செய்வீர்! மனிதஉயிர் காப்பீர் !!

துபாய் தமுமுக நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்


கொஞ்சம் கொடுங்கள், பல நெஞ்சங்கள் வாழ்த்தும்.

திங்கள், 2 நவம்பர், 2009

பொள்ளாச்சியில் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு



பொள்ளாச்சியில் கடந்த அக்டோபர் 23 அன்று தமுமுகவின் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.