புதன், 25 ஜூன், 2014

தமுமுகவின் 114வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு - விழாகோலம் பூணும் ஆயங்குடி!


'வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'


சமுதாய பேரியக்கமான தமுமுகவின் 114 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் வரும் வெள்ளியன்று மாலை ஆயங்குடியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர். பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது, மமக மாநில அமைப்புச் செயலாளர் மண்டலம் எம். ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் முஹம்மது ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இது தவிர உள்ளூர் மருத்தவர்களும், தமிழக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

வரும் 27 அன்று மாலை சுமார் 5 மணியளவில் நகர தமுமுக அலுவலகம் அருகில் பேராரசிரியர் அவர்கள் தமுமுக இருவண்ண கொடிகளை ஏற்றி பொடதுகூட்ட நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நகரின் ஏனைய பகுதிகளில் மாநில செயலாளர் செய்யது தமுமுக கொடியையும், மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் எம். ஜெய்னுல் ஆபிதீன் மமக கொடியையும் ஏற்றிட இருக்கின்றனர். இதற்கிடையில் நகர தமுமுக-மமக அலுவலகத்தை பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் திறந்து வைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடந்து நகரின் பல பகுதிகளில் மரகன்று நடும் நிகழ்வை மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் முஹம்மது தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக (சுமார் 4:30 மணியளவில்) நகர எல்லையிலிருந்து பொதுக்கூட்ட திடல் வரை தமுமுக இருவண்ண கொடிகளுடன் இளைஞர்களின் பேரணி அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இப்பேரணியை மாநில செயலாளர் கோவை செய்யது கொடியசைத்து தொடங்க்கி வைக்கிறார். பேரணி பொதுக்கூட்ட அரங்கை அடைந்ததும், மக்ரீப் தொழுகைக்கு பிறகு தமுமுகவின் 114வது ஆம்புலன்ஸ் முனைவர். பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களால் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்பணிக்கப்பட்டதும், பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளது.

வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்திறகான முன்னேற்பாடுகளை நகர தமுமுக தலைவர் நியமத்துல்லாஹ் தலைமையில் சகநிர்வாகிகளும் தொண்டர்களும் கடந்த சில வாரங்களாகவே மும்முரமாக செய்து வருகின்றனர். நகரத்தின் அனைத்து வீதிகளிலும் கழகத்தின் கருப்பு வெள்ளை கொடிகள் பட்டொளி வீசி பரக்கின்றன. முக்கிய பகுதிகளில் தீவிர தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சார்பில் பிரமாண்ட விளம்பர டிஜிட்டல் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகரின் ஏழு முக்கிய இடங்களில் ஊருக்காக உழைத்தே மாண்ட முன்னோர்களின் பெயரில் வரவேற்பு வளையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் வரவேற்பு வளையம் தனது அசையா சொத்துக்களில் சிலவற்றை ஜாமிஆவிற்கு கொடையளித்த ஹாஜி. முகம்மது இஸ்மாயில் அவர்களின் பெயரில் வைக்கப்பட உள்ளது. இவர் இளம் விஞ்ஞானியும், தமுமுகவின் தீவிர ஆதரவாளருமான டாக்டர். எம்.ஐ. இர்ஷாத்தின் பாட்டனார் என்பது குறிப்பிடதக்கது.

ஆயங்குடியில் அமைந்திருக்கும் பிரமாண்ட அரசு மருத்துவமனை அமைய பெருமளவிலான நிலமளித்த ஹாஜி. முஹம்மது ஹுசைன் அவர்களின் பெயரில் இரண்டாவது வரவேற்பு வளையமும், ஜாமிஆவிற்கு சொந்தமான நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது உயிர்நீத்த ஜனாப். கலீலுர் ரஹ்மான் பெயரில் மூன்றாவது வரவேற்பு வளையமும் அமைக்கப்படவுள்ளது. ஜாமிஆவிற்கு சொந்தமான குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூளையாக செயல்பட்ட ஹாஜி ஜெ. முகம்மது அலி அவர்களின் பெயரில் ஒரு வரவேற்பு வளையமும், நகர ஜாமிஆவின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ். சிராஜுத்தீன் அவர்களின் பெயரில் ஒரு வரவேற்பு வளையமும், நகர ஜாமிஆ மஸ்ஜிதில் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தலைமை இமாமாக பணிபுரிந்த அல்ஹாஜ். மௌலானா மௌலவி சௌகத் அலி மிஸ்பாஹி அவர்களின் ஒரு வரவேற்பு வளையமும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர ஆயங்குடி முஸ்லிம் பட்டதாரிகள் சங்க கல்வி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர், தமிழ் ஆர்வலர், புலவர். அப்துல் குத்தூஸ் அவர்களின் பெயரில் பிரமாண்ட வரவேற்பு வளையம் ஒன்றும் அமையவுள்ளது.

கடல்கடந்து வாழும் மக்கள் பொதுக்கூட்டத்தினை கண்டுகளித்திட நிகழ்வுகள் யாவையும் இணயத்தில் நேரலையாக ஒளிப்பரப்பிடவும், உள்ளூரில் முக்கிய வீதிகளில் பெரும் திரைகளில் ஒளிப்பரப்பிடவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.


தமுமுகவின் எஃகு கோட்டைகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் அதன் 114 ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்காக தீவிரமாக நடைபெற்றுவரும் ஏற்பாடுகள் உள்ளூர் மக்களிடையே மட்டுமின்றி சுற்றிவட்டார சமுதாய மக்களிடையேயும் பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தி உள்ளது - 'வீடு தோரும் தமுமுக' 'வீதி தோரும் அதன் சேவைகள்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக