செவ்வாய், 16 அக்டோபர், 2012


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் எழும்பூர் பகுதி ஆம்புலன்ஸ் மற்றும் பிரேத குளிர்சாதன பெட்டி சேவை...



ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் சேவைக்கு காவல்துறை சான்றிதழ் வழங்கி பாராட்டு!

அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் சேவைக்கு காவல்துறை சான்றிதழ் வழங்கி பாராட்டு!


தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் சேவையை பாராட்டி அதிரை நகர காவல்துறை ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் அவர்கள் அதிரை நகர தமுமுக மமக அலுவலகம் வந்து பாராட்டி நற்சான்றிதழையும் வழங்கினார். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே......




சனி, 28 ஜூலை, 2012

முக்கிய அறிவிப்பு



தமுமுகவின் கிளைகள் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழச்சிகளில் ஆம்புலன்ஸின் எண்ணிக்கையை தவறாக பதிந்துவருகிறார்கள்.

சமீபத்தில் தமுமுகவின் 99 ஆம்புலன்ஸ் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது. அடுத்து நாகை வடக்கு மாவட்டம் நீடுர் நெய்வாசலில் 101 வது ஆம்புலன்ஸூம், திருவண்ணாமலையில் 102 வது ஆம்புலன்ஸூம், லால்ப்பேட்டையில் 103 வது ஆம்புலன்ஸூம், திருச்சி ஏர்ப்போர்ட் பகுதியில் 104 வது ஆம்புலன்ஸூம், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 105 வது ஆம்புலன்ஸூம் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ் அடுத்து வரும் கிளை 106 என்று குறிப்பிடவேண்டுகிறோம்.

குறிப்பு:- இடைபட்ட 100 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்புக்கு அனைத்து கிளைகளும் போட்டிப்போட்டதால், போட்டி போடுவதால் 100 வது ஆம்புலன்ஸை தமுமுக தலைமையகமே இன்ஷா அல்லாஹ் அர்ப்பணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




திருவண்ணாமலை தமுமுகவின் 102 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருவண்ணாமலை தமுமுகவின் 102 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருவண்ணாமலை தமுமுகவின் 102 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய சீர்திருத்தப்பொதுக்கூட்டம் காந்தி சிலை அருகில் 17-07-2012 மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை நகர தலைவர் A.R. நாசர் உசேன் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெரிய பள்ளி இமாம் A.K.அன்சர் பாஷா அவர்கள் கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டி.அப்துல் ஹமீது அவர்கள் துவக்க உரையாற்றினார்.

மெளலான முப்தி பி.எஸ்.அப்துல் காதிர்,  சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.கண்ணன், சி.பி.ஐ திரு.இரா.தங்கராஜ், ம.தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சீனி கார்த்திக்கேயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமுமுக ம.ம.க வின் மாநில தலைவர் மவ்லவி.ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி, தமுமுக வின் மாநில துணை தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, ம.ம.க மாநில அமைப்புச்செயலாளர் எஸ்.எஸ் நாசர் உமரி, தமுமுக வின் மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் அனைத்து சமுதாய மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் S.ஜமால், ம.ம.க மாவட்ட செயலாளர் A.நஜீர்.MC., மாவட்ட பொருளாளர் S.முஹம்மது ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜமாத்தார்கள், பொதுமக்கள். பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

முடிவில் ம.ம.க நகர செயலாளர். M.E.சாகுல் ஹமீது நன்றி கூறினார். 




திங்கள், 23 ஜூலை, 2012

குளச்சலில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் சேவை

குளச்சலில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் சேவை

குளச்சலில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா கடந்த 18-07-2012 அன்று நகர தலைவர் சகோ.பாபு ஹூசைன் அவர்கள் தலைமையில் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. முன்னாள் நகர தலைவர் சகோ.அல் அமீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமுமுகவின் சேவைகளை பாராட்டி குளச்சல் முஸ்லிம் ஜமாத் தலைவர் வி.எம்.கான் அவர்களும், குளச்சல் DSP செந்தில் வேல் அவர்களும், த.கி.மு.ஐ மாநில பொதுசெயலாளர் Adv.தியோடர் சேம் அவர்களும், மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் தமுமுகவின் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்துகொண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்தினார்கள். மற்றும் தமுமுகவின் மாநில செயலாளர் பேராசிரியர்.முனைவர்.ஜெ.ஹாஜா கனி அவர்களும், தமுமுக மாநில செயலாளர் பி.எஸ்.ஹமீது அவர்களும், மாநில பேச்சாளர் நெல்லை மைதீன் சேட் கான் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக நகர செயலாளர் அபுதாகிர் அவர்கள் நன்றியுரை கூற துவாவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில் ஏராளமான சமுதாய சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்... 







குறிப்பு – தமுமுக ஆம்புலன்ஸ் எண்ணிக்கையில் சிறுகுழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே குளச்சல் ஆம்புலன்ஸ் கண்டிப்பாக 100 ஐ தாண்டியதாகத்தான் இருக்கும். தவறுக்கு வருந்துகிறோம்... இறைவன் நாடினால் மிகவிரைவில் தமுமுக ஆம்புலன்ஸ்களின் விவரம் வெளியிடுவோம்.


சோழபுரத்தில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

சோழபுரத்தில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரத்தில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் மூத்த தலைவர் பேராசிரியர்.டாக்டர்.M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு அர்ப்பணித்து சிறப்பரை நிகழ்த்தினார்கள். இதில் தமுமுகவின் மாநில செயலாளர் பேராசிரியர்.டாக்டர்.ஜெ.ஹாஜா கனி அவர்களும், வேலூர் மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாட்ஷா அவர்களும், தஞ்சை மாவட்டத்தின் முன்னாள் தலைவர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.














ஞாயிறு, 22 ஜூலை, 2012

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் தமுமுகவின் 98 (3) வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் தமுமுகவின் 98 (3) வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

கடந்த 15-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 98 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவும் சிறைவாசிகளை விடுதலைசெய்யக்கோரியும், முஸ்லிம்களுக்கு மத்தியளவில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக ம.ம.கவின் மாநில தலைவர் மவ்லவி.ஜெ.எஸ்.ரிபாயி அவர்களும் தமுமுகவின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும், மாநில மருத்துவ சேவை அணிச்செயலாளர் கித்ரு அவர்களும் கலந்துகொண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆம்புலன்ஸை அர்பணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் இப்ராஹீம் ஷா, ம.ம.க மாவட்ட செயலாளர் பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது உள்பட நிர்வாகிகள் மற்றும் சமுதயா மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...








லால்பேட்டையில் தமுமுகவின் 97 (2) வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

லால்பேட்டையில் தமுமுகவின் 97 (2) வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் எஸ்.ஏ.முனவ்வர் உசேன் நினைவரங்கிள்   கடந்த 14-07-2012 சனிக்கிழமையன்று நடைப்பெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மமக அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மமக முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி, பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, மாநில நிர்வாகிகள் ஹாரூண் ரஷீத்,  நாசர் உமரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.










இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
/
தீர்மானம் 1
/
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துமனைகளில் நமது தமுமுக ஆம்புலன்ஸ் அவசர சேவைக்காக  மையத் எடுக்க செல்லும் போது அங்குள்ள மருத்துவனையில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களால் நமது ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவர்களின் சேவைக்கு பாதிப்புக்கு { இடையூறு } ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்துவதோடு இடையூறுகள் ஏற்படாதவாறு தடுக்க இப்பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம் 2
/            
லால்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியை பிரித்து பெண்களுக்காக தனிப் பள்ளியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு உத்தரவும் கிடைத்தது அதற்கான தொகை ரூபாய் ஒரு லட்சம் பணமும் லால்பேட்டை ஜமாஅத் சார்பாக செலுத்தப்பட்டது கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் கடலூரில் நடந்த விழாவில் வைத்து இப் பள்ளியை திறப்பு விழா செய்தார். எப்பணியும் நடை பெறாமலேயே  திறப்பு விழா கண்டபோதும் இப்பள்ளி இன்று வரை அமைக்கப்படவில்லை. இப்பள்ளி அமைவதை ஏதோ ஒரு மறைமுக சக்தி தடுக்கிறது அதை வண்மையாக கண்டிக்கிறோம். மேலும் இப்பள்ளிக்கு தேவையான நடடிக்கைகள் எடுத்து இப்பள்ளி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் இதை தாமதம் செய்துக் கொண்டே இருந்தால் அதற்காக தனியே ஒரு போராட்டம் அறிவித்து வென்றெடுக்கவும் தயாராக உள்ளோம் எனவே உடனே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட வேண்டுமென இப்பொது கூட்டம் கேட்டுக்கொள்கிறது.











தீர்மானம் 3
/
சமீபத்தில் பெரம்பலூர் ஆட்சித்தலைவர் ஒரு திருமண நிகழ்வில் தலையிட்டு  மணப்பெண்ணுக்கு 17 வயது மட்டுமே என்பதால் இத்திருமணத்தை நடத்தக் கூடாது என தடுத்துள்ளார். இதை கவனத்தில் கொண்ட மாநில ஜமாஅத்துல் உலமா இதை வண்மையாக கண்டித்துள்ளதுடன் ஷரீஅத் வழங்கியுள்ள உரிமையை அரசு கைவைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அதை ஆதரித்து இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 4
/
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு சேர்க்கையில் சி குரூப்பிலேயே அதிகமானோர் சேர்க்கப்படும் நிலை உள்ளது இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் சி குரூப்பில் சேர ரூபாய் இரண்டு ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சி குரூப்பிற்கு சொந்தமாக ஆசிரியர் போட்டு நடத்துகிறோம் அதனால் இந்த பணம் வாங்குகிறோம் என்று கூறுகின்றனர் இது ஏற்கத்தக்கதல்ல. அரசு பள்ளியில் இலவச கல்வி இல்லை என்றால் இலவச கல்வியை தனியார் பள்ளிகள் எப்படி வழங்கும்? எனவே இக்கட்டணத்தை விலக்கிக் கொண்டு இலவசமாகவே 11 ம் வகுப்பு சேர்க்கை நடைபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.












தீர்மானம் 5
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் அரசு மருத்துவமனை உள்ளது ஆனால் துரதிர்ஷ்டவசமாக லால்பேட்டை பேரூராட்சியில் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவனை இல்லாமல் உள்ளது. இந்த ஊருக்கு மருத்துவனை வேண்டும் என்பதை நீண்ட காலமாக கோரிக்கை வைத்து முயற்ச்சி செய்த போதும் என்ன காரணமோ மருத்துவமனை அமைக்கப்படவே இல்லை. எனவே இனியாவது இப்போது இயங்கும் பேரூராட்சி நிர்வாகம் இதை உடனடியாக கவனத்தில் கொண்டு துரிதமாக ஒரு மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது. அரசு வழங்கும் திட்டம் எல்லா ஊர்களுக்கும் பொதுவானது எனும் போது லால்பேட்டைக்கு மட்டும் அரசு மருத்துவமனை தராத அரசு நிர்வாகம் ஏன் பாரபட்சம் காண்பிக்க வேண்டும்? எனவே உடனடியாக இந்த ஊரில் ஒரு சிறந்த மருத்துவமனை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










முன்னதாக மாலை 5 மணியளவில் லால்பேட்டை புது பஜாரில் அமைக்கப்படு இருந்த மர்ஹும் அல்லாமா கே.ஏ.முஹம்மது ஜெகரியா ஹஜ்ரத் நினைவு நுழைவு வாயில் இருந்து மோட்டார் வாகன பேரணி புரப்பட்டு லால்பேட்டை புது பஜார் மற்றும் எள்ளேரி ஆகிய முக்கிய இடங்களில் தமுமுக, மமக கொடிகளை மாநில நிர்வாகிகள் ஏற்றி வைத்தனர்.
/
 கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மெஹராஜுத்தீன், நெல்லிக்குப்பம் தம்பிராஜா, மாவட்டப் பொருளாளர் ஏ.எம்.அய்யூப், வர்த்தக அணிச் செயலாளர் அப்துல் சமது, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.ஏ.அஹமது அலி, உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் மற்று மாவட்டத்தில் பல் வேறு ஊர்களில் இருந்து தமுமுக, மமக தொன் டர்கள் ஆயிரக்கனக்கானோர்  கலந்து கொண்டனர். எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே....!






வியாழன், 12 ஜூலை, 2012

தமுமுக வின் மக்கள் சேவைகளில் மகுடமான ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா!

தமுமுக வின்  மக்கள் சேவைகளில் மகுடமான ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா!





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மக்கள் சேவைகளின் மகுடமான அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ்.... 3 தினங்களில் அடுத்தடுத்து இறைவனின் மிகப்பெரும் கிருபையினார் மக்கள் சேவைக்காக அர்பணிக்கப்பட இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்...


ஜூலை 14 - 2012 லால்பேட்டையில் தமுமுக ம.ம.க வின் தலைவர் மவ்லவி ஜெ.எஸ்.ரிபாயி அவர்களும் ம.ம.கவின் பொதுச்செயலாளர் அண்ணன் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துகொண்டு அர்பணித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள்.

ஜூலை 15 - 2012 திருச்சி ஏர்போர்ட் கிளை சார்பில் தமுமுக ம.ம.க வின் தலைவர் மவ்லவி ஜெ.எஸ்.ரிபாயி அவர்கள் கலந்துகொண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்பணித்து உரை நிகழ்த்துகிறார்கள்.

ஜூலை 18 - 2012 குமரி மாவட்டம் குளச்சலில் தமுமுகவின் மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்துகொண்டு அவசர ஊர்தியை  அனைத்து சமுதாய மக்களுக்கு மத்தியில் அர்பணித்து உரை நிகழ்த்துகிறார்கள்.


இது தமுமுகவின் மக்கள் சேவை புரட்சி... மனிதநேய பண்பாளர்களன் வளர்ச்சி...

சமுதாய நியாயவான்களே பொதுசேவையில் நீங்களும் பங்கெடுக்க வாருங்கள்...

என்று மக்கள் சேவையில்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
மனிதநேய மக்கள் கட்சி