திங்கள், 24 மே, 2010

தமுமுக வின் 83 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களுக்கும் 82 ஆம்புலன்ஸ்களை அர்ப்பணித்து ஜாதி மதம் பாறாது சேவை செய்து வருகிறது. அதன் தொடர்சியாக 83 வது அவசர ஊர்தியை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் எதிர்வரும் 29-05-2010 சனிக்கிழமை தமுமுகவின் மாநில பொது செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களால் இறைவன் நாடினால் அணைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாபெரும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் எம்.தமீமுன்அன்சாரி அவர்களும், தமுமுக வின் மாநில துணை செயலாளர் கோவை.ஈ.உமர் அவர்களும், தமுமுக மற்றும் மமகவின் மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.
அன்புடன் அழைக்கிறது...
தமுமுக மற்றும் மமக
சத்தியமங்கலம் கிளை,
ஈரோடு மாவட்டம்.

வியாழன், 20 மே, 2010


திருப்பூரில் தமுமுகவின் எண்பத்தி இரண்டாவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.


திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் தமுமுக வின் எண்பத்தி இரண்டாவது ஆம்புலன்ஸ் தமுமுக வின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் செ.ஹைதர் அலி அவர்களால் அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தமுமுக வின் மாநில செயலாளர் சகோதரர்.கோவை உமர் அவர்களும் தமுமுக வின் மாநில துணைச் செயலாளர் சகோதரர்.கோவை செய்யது அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான சமுதாய சொந்தங்கள் மற்றும் மாற்று மத சகோதரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்..)

செவ்வாய், 18 மே, 2010


மங்களபேட்டையில் தமுமுகவின் என்பதாவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

இராமநாதபுர மாவட்டம் மங்களபேட்டையில் தமுமுகவின் என்பதாவது ஆம்புலன்சை தமுமுகவின் மாநில பொதுசெயலாளர் சகோதரர் செ.ஹைதர் அலி அவர்கள் அணைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில் ஜமாத்தார்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்....)

அருரில் தமுமுகவின் 79 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தர்மபுரி மாவட்டம் ஆருர் நகர தமுமுக சார்பாக கடந்த 14.03.2010 அன்று தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கலந்தர் தலைமை தாங்கினார். ஆம்புலன்ஸை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்ததார்.

இந்த நிகழ்ச்சியில் அருர் அஹ்லே சுன்னத் ஜமாத் செயலாளர், அருர் பேருராட்சி தலைவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்

தமுமுகவின் 77வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கடந்த 31.01.01 அன்று தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார்.

மதுக்கூர் மருத்துவர்கள் வாஞ்சிலிங்கம், தனபால் மற்றும் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.