செவ்வாய், 17 ஜூன், 2014

பொதக்குடி ஆம்புலன்ஸ்க்கு உதவுங்கள்!



பொதக்குடி தமுமுக ஆம்புலன்ஸ் அல்லாஹ்வின் கிருபையால் 5 ஆண்டுகளாய் நாம் சிறப்பாக சேவை ஆற்றி வருகிறோம், ஏழை எளிய மக்களுக்கும் பிற சமுதாய மக்களுக்கும் பயன்படும் ஆம்புலன்ஸ், தற்போது இன்ஞ்ஜின் பழுது அடைந்து இருக்கிறது இதை சரி செய்வதற்கு சுமார் 61,000 தேவைப்படுகிறது... மனிதநேய கொண்டவர்களே...! இன்ஷா அல்லாஹ் உதவி கரங்கள் நீட்டுங்கள் மேலும் நம் சேவை பணிகள் தொடர உதவுங்கள்... நம் பணி இறைப்பணி என்றும் சமுதாய பணிகள்... 

வாழும் வாழ்க்கை கொஞ்சம் நாள்...

வாழட்டும் நம் சேவை நீண்ட நாள் ... 

இவன் "தமுமுக" பொதக்குடி கினள 
தொடர்புக்கு::
சாகுல் ஹமீது-9842468708
பாவா பகுருதீன் 9965841315

ஞாயிறு, 15 ஜூன், 2014

சீர்காழியில் 113 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




இன்ஷா அல்லாஹ் 21/06/2014 அன்று தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்ற கழகம் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழியில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமுமுக மாநில தலைவர் அண்ணன் J.S.ரிபாய் அவர்களும் மாநில பொதுச்செயலாளர் அண்ணன் P.அப்துல் சமது அவர்களும் கலந்துகொண்டு அர்ப்பனித்து உரை நிகழ்த்துகின்றனர்.

அன்புடன் அழைக்கிறது.

சீர்காழி நகர தமுமுக

நாகை வடக்கு மாவட்டம்...



புதன், 11 ஜூன், 2014

ஆயங்குடியில் தமுமுகவின் 114 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


கடலூர் மாவட்டம் ஆயங்குடி நகர தமுமுக சார்பில் 114 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் 2706-2014 அன்று நடைபெறுகிறது. தமுமுகவின் மூத்த தலைவரும், ம.ம.கவின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து உரை நிகழ்த்துகிறார். இதில் மாநில செயலாளர் கோவை செய்யது, கடலூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

இவண்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
ஆயங்குடி கிளை
கடலூர் மாவட்டம் 


சனி, 7 ஜூன், 2014

ஆயங்குடியில் தமுமுகவின் 114 வது ஆம்புலன்ஸ்



கடலூர் தெற்கு மாவட்ட ஆயங்குடி நகர தமுமுகவின் சார்பில் 114 வது ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக 27-06-2014 அர்ப்பனிக்கப்பட இருக்கிறது.


எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே