Saturday, 10 July 2010

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தமுமுக வின் 85வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றறக் கழகத்தின் திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 85வது அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஜுலை 9 அன்று நடைபெறுகின்றது.
இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மங்களபேட்டையில் தமுமுகவின் என்பதாவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
இராமநாதபுர மாவட்டம் மங்களபேட்டையில் தமுமுகவின் என்பதாவது ஆம்புலன்சை தமுமுகவின் மாநில பொதுசெயலாளர் சகோதரர் செ.ஹைதர் அலி அவர்கள் அணைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில் ஜமாத்தார்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்....)