அம்பத்தூரில் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
Saturday, 10 July 2010
திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூரில் தமுமுகவின் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
தலைமை நிர்வாக உறுப்பினர் குணங்குடி ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கருத்துரையாற்றினர்.மாவட்ட தமுமுக தலைவர் கமருதீன், மாவட்டச் செயலாளர் ஹாரூன் ரஷீத், மாவட்டப் பொருளாளர் ஷேக் தாவுத், ம.ம.க மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக