திருப்பூரில் தமுமுகவின் எண்பத்தி இரண்டாவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.
திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் தமுமுக வின் எண்பத்தி இரண்டாவது ஆம்புலன்ஸ் தமுமுக வின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் செ.ஹைதர் அலி அவர்களால் அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தமுமுக வின் மாநில செயலாளர் சகோதரர்.கோவை உமர் அவர்களும் தமுமுக வின் மாநில துணைச் செயலாளர் சகோதரர்.கோவை செய்யது அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான சமுதாய சொந்தங்கள் மற்றும் மாற்று மத சகோதரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்..)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக