குளச்சலில்
தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் சேவை
குளச்சலில்
தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா கடந்த 18-07-2012 அன்று நகர
தலைவர் சகோ.பாபு ஹூசைன் அவர்கள் தலைமையில் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. முன்னாள்
நகர தலைவர் சகோ.அல் அமீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட மற்றும் நகர
நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமுமுகவின் சேவைகளை பாராட்டி
குளச்சல் முஸ்லிம் ஜமாத் தலைவர் வி.எம்.கான் அவர்களும், குளச்சல் DSP செந்தில் வேல் அவர்களும், த.கி.மு.ஐ மாநில பொதுசெயலாளர் Adv.தியோடர் சேம் அவர்களும், மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்கினர். இதில் தமுமுகவின் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்துகொண்டு
அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்தினார்கள். மற்றும் தமுமுகவின் மாநில செயலாளர் பேராசிரியர்.முனைவர்.ஜெ.ஹாஜா கனி அவர்களும்,
தமுமுக மாநில செயலாளர் பி.எஸ்.ஹமீது அவர்களும், மாநில பேச்சாளர் நெல்லை மைதீன்
சேட் கான் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நகர
செயலாளர் அபுதாகிர் அவர்கள் நன்றியுரை கூற துவாவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில்
ஏராளமான சமுதாய சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
குறிப்பு – தமுமுக ஆம்புலன்ஸ்
எண்ணிக்கையில் சிறுகுழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ்
தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே குளச்சல் ஆம்புலன்ஸ் கண்டிப்பாக 100 ஐ தாண்டியதாகத்தான் இருக்கும். தவறுக்கு
வருந்துகிறோம்... இறைவன் நாடினால் மிகவிரைவில் தமுமுக ஆம்புலன்ஸ்களின் விவரம்
வெளியிடுவோம்.
assalamu alikkum
பதிலளிநீக்குkulachchalilum solapuraththilum eppadi 99 vathu ambulance arppanikkappattathu ondru 99 matrondru 100 ththaane irukkavendum vilakkavum allathu thiruththavum