வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மினி பஸ் மோதி பெண் பலி தமுமுக ஆம்புலன்ஸ் விரைவு!


மினி பஸ் மோதி பெண் பலி தமுமுக ஆம்புலன்ஸ் விரைவு!

நேற்று இரவு கடலூர் பஸ் நிலையத்தில் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ராசி திருமண மண்டபம் உரிமையாளர் அவர்களின் மருமகள் ஜாஸ்மிண் எண்பவர் மீது மினி பஸ் ஏறி தலையில் அடிபட்டு அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. தகவல் அரிந்த சில நிமிடங்களில் நெல்லிக்குப்பம், கடலூர் நகர தமுமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று அங்கு தேவையான உதவிகளை செய்தனர். சகோதிரியின் ஜனாஸா தமுமுக ஆம்புலண்ஸில் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்தில் உயிர் இழந்த சகோதிரிக்கு துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

தகவல் - அஸ்கர் அலி நகர செயலாளார் தமுமுக நெல்லிக்குப்பம்

சனி, 2 ஆகஸ்ட், 2014

மறைந்த களக்காடு ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு ஆறுதல்!


நெல்லை (கிழக்கு) மாவட்டம் களக்காடு கிளை #தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் சகோ மர்ஹூம் ஆரிப் அவர்கள் இல்லம் சென்ற தமுமுக மாநில தலைவர் மவ்லவி J.S.ரிபாயி ரஷாதி அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினார். மாவட்ட பொறுப்புகுழு தலைவர் மில்லத் இஸ்மாயில் பொறுப்பு குழு உறுப்பினர் அப்துல் வாஹித், பேட்டை சேக், வக்கீல் மீரான் உடனிருந்தனர்.




தொண்டியில் சாலை விபத்து மீட்பு பணியில் தமுமுக ஆம்புலன்ஸ்!


தொண்டி அருகே இன்று காரும் பஸ்ஸூம் விபத்துக்குள்ளானது இதனை அறிந்த #தமுமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸோடு களத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்




களக்காடு நகர தமுமுக தலைவர் வபாத்தானார்.

நெல்லை,கிழக்கு மாவட்டம் களக்காடு #தமுமுக நகர தலைவராக சகோ.ஆரிப் இருந்து வந்தார். இன்று மாலை ஆம்புலன்ஸில் ஒரு நோயாளியை சேர்த்துவிட்டு வந்தார்.பிறகு நோன்பை திறந்து விட்டு மீன்டும் ஒரு நோயாளியை அவசர ஊர்தியில் கொண்டு சென்றார்.

போகும்வழியில் நாங்குநேரி பை பாஸ் சாலையில்ஆரிபிற்க்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டோரத்தில் நிறுத்தியவுடன் அவரது உயிர் பிரிந்தது.(இறைவன் நாட்டம்) ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஹூவூன்

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரை சுவனத்தில் நுழைய செய்வானாக!

முதியவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!



குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 80 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 07-07-2014 அன்று மரணித்துவிட்டார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என தகவல் அறிந்ததும் தமுமுக மாவட்ட நிர்வாகம் இவரை அடக்கம் செய்ய முயற்சி செய்து அதன் அடிப்படையில் அரிப்புதெரு பள்ளியில் அடக்கம் செய்ய ஜமாத்நிர்வாகம் அனுமதி அளித்தது இன்று 09-07-2014 மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யபட்டது. தமுமுக உள்ளிட்ட சமுதாய இயக்க பிரதிநிதகள் பங்கெடுத்தனர்.

திங்கள், 7 ஜூலை, 2014

அதிரை அருகே வாகன விபத்து இருவர் பலி – தமுமுக ஆம்புலன்ஸ் களத்தில்


அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவன் ( வயது 26  ) குமார் ( வயது 24 ) நண்பர்களான இருவரும் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் கீழத்தோட்டத்திலிருந்து கருங்குளம் நோக்கி ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் பேராவூரனியிலிருந்து முத்துபேட்டையை நோக்கி டெம்போ வாகனம் வாழைத்தார்களை ஏற்றிகொண்டு சென்றது. டெம்போ வாகனம் கருங்குளம் அருகே சென்றுகொண்டிருந்த போது பின்புறமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் இறந்த வாலிபர்களின் இரு உடல்களையும் கைப்பற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றது.


தகவலறிந்த வாலிபர்களின் உறவினர்கள் மருத்துவனையில் சோகத்துடன் காணப்படுகின்றனர். பிரத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 




நன்றி –அதிரை நியூஸ்

ஞாயிறு, 29 ஜூன், 2014

போரூரில் அடுக்கு மாடி இடி விழுந்து தரைமட்டம் மீட்பு பணியில் 5 ஆம்புலன்ஸ்கள் 50 தமுமுகவினர்


சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் நேற்று 13 அடுக்கு மாடி இடிந்து தரமட்டமானது 100க்கும் மேற்ப்பட்டோர் சிக்கிகொண்டனர் தமுமுக மற்றும் ..க காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்கள் ஆலோசனையின் படி மீட்பு குழு நேற்று இரவு முதல் இன்று வரை போராடி வருகிறது. மாவட்ட செயளாலர் J.சலீம்கான் தலைமையில் 5 ஆம்புலன்ஸ்களும் 50 பேர் கொண்ட மீட்பு குழுவும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மாவட்ட தொண்டரணி செயளாலர் S.R.A.இப்ராஹிம் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் S.தமீம் அன்சாரி மற்றும் மாவட்ட மாணவரணி செயளாலர் கௌஸ் பாஷா மற்றும் தொண்டரணி மாணவரணி நிர்வாகிகளுடன் 50 க்கும் மேற்பட்ட தமுமுகவின் போர்படை வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.