வியாழன், 10 நவம்பர், 2011

தமுமுக-வின் 89-வது ஆம்புலன்ஸ் அறந்தாங்கியில் அர்ப்பணிப்பு!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தமுமுக சார்பாக தமுமுகவின் 89வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, மாவட்ட அலுவலகம் திறந்து வைத்தல், கழக கொடியேற்றுதல் என முப்பெரும் விழா 2.10.2010 அன்று நடைபெற்றது.
அறந்தாங்கியில் கட்டுமாவடி சாலையில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி திறந்து வைத்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித் தார். தொடர்ந்து அறந்தாங்கி பேருந்து நிலையம், கட்டுமாவடி சாலை, பெரிய பள்ளிவாசல் எதிர்புறம், அக்னி பஜார் ஆகிய இடங்களில் கொடியேற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தலைமைக்கழகப் பேச்சாளர் கோவை ஜாஹிர், முன்னாள் ரியாத் மண்டலச் செயலாளர் முபாரக் அலி, கத்தார் மண்டலச் செயலாளர் ஜகுபர் அலி, குவைத் மண்டல பொருளாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பொதுச் செயலாளர் தமுமுகவின் 89வது (புதுக்கோட்டை மாவட்டத்தின் 4வது) ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்ப்பணிக்க, மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆம்புலன்ஸ் சாவியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த முப்பெரும் விழா ஏற்பாடுகளை அறந்தாங்கி நகர செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக செய்தனர்.தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக