திங்கள், 14 நவம்பர், 2011

முத்துப்பேட்டையில் அடையாளம் தெரியாத 70 வயது பெரியவர் ஆற்றில் மூழ்கி சாவு!! தமுமுக மற்றும் ததஜ வினர் தமுமுகவின் ஆம்புலன்ஸ் உதவியுடன் நல்லடக்கம்







முத்துப்பேட்டை, நவம்பர் 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோரையாற்றில் ஒரு பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்திகள் வந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அங்கு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த பிணத்தை த.மு.மு.க வின் நகர தலைவர் ஜனாப். M.சம்சுதீன், த.மு.மு.க .வின் நகர பொருளாளர் ஜனாப். S.ஜெஹபர் சாதிக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜனாப் .A .அன்சாரி, TNTJ உறுப்பினர்.ஜனாப்.பசூல் ரஹ்மான் ஆகியோர் ஜனாஸாவை கைப்பற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்சின் மூலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பிணத்தின் உறவினர்கள் யார் என்று தெரியாமல் இருந்ததால் மேலும் இவர் முஸ்லிம் மதத்தை சேர்த்தவர் என்று தெரிந்த காரணத்தால் போலீசார் அனுமதியுடன் ஜனாஸாவை ஆசாத் நகர் முகைதீன் பள்ளி மையவாடியில் இன்று மாலை அப்பகுதி மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வியாழன், 10 நவம்பர், 2011

அதிரையில் 95வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் 11.09.2011 அன்று மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா நடைபெற்றது.
நகர த.மு.மு.க தலைவர் உமர் தம்பி தலைமைஏற்க சகோதரர் யி.கலந்தர் (முன்னாள் மாவட்ட செயலாளர் ம.ம.க) தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவில் த.மு.மு.க பொதுச்செயலாளர் ஷி.ஹைதர் அலி, ம.ம.க துணை பொதுச்செயலாளர் வி.தமிமுன் அன்சாரி, த.மு.மு.க மாநிலச் செயலாளர் பேரா. யி.ஹாஜா கனி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமீரக தலைவர் அப்துல் ஹாதி முன்னிலை வகித்தார். அத்துடன் அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இறுதியாக, த.மு.மு.க நகர செயலாளர் வி.பி.தையூப் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.





மங்கலத்தில் 93வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஒன்றியம் சார்பில் 93-வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.







கோவையில் 92 வது ஆம்புலனஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி


கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் 92-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நடந்தது.
கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் காலம் சென்ற மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அன்னாரின் பெயரில் கோவையில் மருத்துவ மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்த பகுதியில் அனைத்து சமுகத்தை சேர்ந்த மக்களும் பயனடைய இந்த மருத்துவ மனை துவக்கப்பட்டது. தினமும் சுமார் 40க்கும் மேற்பட்றோர்கள் வந்து சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. ஒரு நபர்க்கு டாக்டர் கட்டணம் 20 ரூபாய் மற்றும் மருந்துக்கு 10 ரூபாய் வாங்கப்படுகிறது, இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மிகவும் பயன் அடைகிறார்கள். இப்போது இந்த பகுதியில்அனைத்து சமூக மக்கள் பயன் அடையா ஒரு ஆம்புலன்ஸ் தேவைபட்டது. இதன் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 26ம் தேதி அப்துர் ரஹீம் மருத்துவமனை முன்பு, இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 92வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஷாஜஹான் தலைமையில், தமுமுக மருத்து அணி நகரசெயலாளர் நசீர் பாபு , வரவேற்புரை நிகழ்த்தினார். ஆம்புலன்ஸை மாநில செயளாளர் கோவை இ. உமர் அர்ப்பணித்தார். தமுமுக மாநில கழக பேச்சாளர் கோவை ஜாகீர், தமுமுக மாவட்ட தலைவர் பர்க்கத் அலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் ,தமுமுக மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மற்றும் மாவட்டம், நகரம், கிளை கழக,தமுமுக, மமக, நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இதில் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். முடிவில் குனிசை நகர மருத்துவ அணி செயளாளர் அகமது கபீர் நன்றிகூறினர்.இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ மனை பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் செய்து வந்தார்.

பொட்டல்புதூரில் தமுமுகவின் 90வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது.கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் த.மு.மு.க., சார்பில் புதிய ஆம்புலன்சை பொதுமக்களுக்காக வாங்கி அதன் அர்ப்பணிப்பு விழா நடந்தது.
பொட்டல்புதூரில் நடந்த விழாவிற்கு த.மு.மு.க., கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார்.


ஷாபி ஜமாத் தலைவர் முகமதுஅலி, ஜமாத் தலைவர் முகமதுகனி, கிளை பொருளாளர் மதார்கனிலெப்பை, துணை செயலாளர் முகமதுகான், மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ராஜாஜி, கிளை பொருளாளர் காஜாமைதீன், ஒன்றிய பேச்சாளர் ஈசாக் அலி, த.மு.மு.க., கிளை தலைவர்கள் வீராசமுத்திரம் நாகூர்கனி, சம்பன்குளம் அப்துல்ரகுமான், முதலியார்பட்டி பாசூல்அஷ்ரப் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் நம்பிராஜன், பழனிக்குமார், கடையம் வட்டார மோட்டார் வாகன சங்க தலைவர் முருகேசன், பொட்டல்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் செய்யது மசூது, பொருளாளர் அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.


மாநில பொது செயலாளர் ஹைதர்அலி, மாநில செயலாளர் கோவை செய்யது பேசினர்.புதிய ஆம்புலன்ஸ்க்கான சாவியை த.மு.மு.க., மாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி கிளை தலைவர் முகமதுஅலிஜின்னாவிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி, மாவட்ட துணை செயலாளர் சர்தார்அலிகான், கடையம் ஒன்றிய செயலாளர் காஜாஅலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்சேட்கான், மாவட்ட பொருளாளர் ரசூல்மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் நயினார்முகமது, சுல்தான்மைதீன், கடையம் ஒன்றிய செயலாளர் மீரான்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிளை செயலாளர் ஆட்டோ சித்திக் நன்றி கூறினார். பொதுமக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு 99445 09050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என த.மு.மு.க.,வினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தமுமுக-வின் 89-வது ஆம்புலன்ஸ் அறந்தாங்கியில் அர்ப்பணிப்பு!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தமுமுக சார்பாக தமுமுகவின் 89வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, மாவட்ட அலுவலகம் திறந்து வைத்தல், கழக கொடியேற்றுதல் என முப்பெரும் விழா 2.10.2010 அன்று நடைபெற்றது.
அறந்தாங்கியில் கட்டுமாவடி சாலையில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி திறந்து வைத்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித் தார். தொடர்ந்து அறந்தாங்கி பேருந்து நிலையம், கட்டுமாவடி சாலை, பெரிய பள்ளிவாசல் எதிர்புறம், அக்னி பஜார் ஆகிய இடங்களில் கொடியேற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தலைமைக்கழகப் பேச்சாளர் கோவை ஜாஹிர், முன்னாள் ரியாத் மண்டலச் செயலாளர் முபாரக் அலி, கத்தார் மண்டலச் செயலாளர் ஜகுபர் அலி, குவைத் மண்டல பொருளாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பொதுச் செயலாளர் தமுமுகவின் 89வது (புதுக்கோட்டை மாவட்டத்தின் 4வது) ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்ப்பணிக்க, மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆம்புலன்ஸ் சாவியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த முப்பெரும் விழா ஏற்பாடுகளை அறந்தாங்கி நகர செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக செய்தனர்.தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.